விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

புத்தளத்தில் (24.04.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றும் போதே, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது; கடந்த அரசாங்கங்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தன. மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் இன்று மக்களின் நலனையே மையமாகக் கொண்டு செயல்படும் அரசாங்கம் உருவாகியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல திட்டங்களை மக்களுக்காக முன்னெடுத்துள்ளோம். இனியும் அதே பாதையில் செயல்படுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியதாவது; முக்கிய தேவைபடும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை முற்றிலுமாக நீக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் இவ்வாறு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.