உயர்தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!



2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்சமயம், பெறுபேறுகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த திகதிக்குப் பிந்தே முடிவுகளை வெளியிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 333,185 பரீட்சார்த்திகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.