இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு இதோ!



இலங்கையர்களுக்கு நாளை அதிகாலை 5.30க்கு வெள்ளி, சனி மற்றும் சந்திரன் ஒரே நேரத்தில் காட்சியளிப்பதை காணும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இலங்கையர்கள் நாளை (ஏப்ரல் 25) அதிகாலை ஒரு அரிய வானியல் நிகழ்வை தங்கள் கண்களால் நேரில் காணும் வாய்ப்பைப் பெற உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளி, சனி மற்றும் சந்திரன் என்ற மூன்று கிரகங்களும் மிக நெருக்கமாக வானில் தோன்றும்.

இந்த அபூர்வ நிகழ்வை கிழக்கு வானில் அதிகாலை 5.30 மணியளவில் வெறும் கண்களால் பார்க்க இயலும். வானிலை தெளிவாக இருந்தால், எந்தவொரு தொலைநோக்கி உபகரணமும் இல்லாமல் இந்த சிறப்பான காட்சியை அனுபவிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.