கொழும்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இன்று (21.04.2025) காலை 7 மணி முதல் 11:45 மணி வரை கொழும்பு – கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவும், கடலோர காவல்துறை பிரிவும் உட்பட்ட பகுதிகளில் இடைக்கிடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இக்குறித்த கட்டுப்பாடுகள், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், முகத்துவாரத்திலிருந்து புறக்கோட்டை வரை மற்றும் கிறிஸ்டி பெரேரா சுற்றுவட்டத்திலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரையிலான வீதிகள் தற்காலிகமாக மூடப்படும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, இயன்றளவுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.