க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்கள் வினவியபோது அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சை எழுத்தினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள், 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச நிலையங்களில் நடைபெற்றது. செயல்முறை பரீட்சை கடந்த பெப்ரவரி 08 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.