தங்கநகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் நிலையில், நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (ஏப்ரல் 7) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,285-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 18 காரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,830-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து, ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.