எரிவாயு விலை உயர்வை தொடத்ந்து லிட்ரோ சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு !

இலங்கை முழுவதும் பல பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

லாஃப் எரிவாயு விலை உயர்வு காரணமாக லிட்ரோ எரிவாயுவை வாங்க நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படாவிட்டாலும், லாஃப் தனது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.420 உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.