வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25.04.2025) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற, பொதுமக்களை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.