ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வு பெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள போதிலும் திட்டமிட்டபடி ஓய்வூதியம் வழங்க முடியும் என ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் (K.G.R. Jayanath) தெரிவித்தார்.

இந்நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் கடந்த 7 நாட்களாக நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளதாகவும், இது ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெறும் அதிகாரிகளின் தகவல்களை புதுப்பிக்கும் கணினி அமைப்பையே பாதித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கோளாறினால் ஓய்வூதியங்கள் வழங்கும் பணிகளில் எந்தவித தடையும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியங்களை வழங்க முடியும் எனவும், தற்போது சுமார் 7 இலட்சத்து 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.