இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்


நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில், சமீப காலமாக உச்சத்தைத் தொட்ட விலைகள் தற்போது சற்றே குறைவடைந்துள்ளன.

இன்றைய தினம் (25.04.2025) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,006,460 ஆக பதிவாகியுள்ளது.

தற்போதைய தங்க விலை விபரங்களின் படி, 24 கரட் தங்கம் (1 கிராம்)  ரூ.35,510 ஆகவும் 24 கரட் தங்கம் (1 பவுண் 8 கிராம்)  ரூ.284,050 ஆகவும் 22 கரட் தங்கம் (1 கிராம்)  ரூ.32,560 ஆகவும் 22 கரட் தங்கம் (1 பவுண்  8 கிராம்)  ரூ.260,450 ஆகவும் 21 கரட் தங்கம் (1 கிராம்)  ரூ.31,080 ஆகவும்  21 கரட் தங்கம் (1 பவுண் 8 கிராம்) – ரூ.248,640 ஆகவும்

இந்த விலைச்சுழற்சி உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் இடையே ஏற்பட்ட மாற்றத்துக்கும் தொடர்புடையதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.