தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.27,000 ஆக உயர்த்துவதற்காக, தற்போதுள்ள சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது முகப்புத்தக பதிவில் இதனை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதத்தில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 ஆக உள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இந்த அதிகரிப்பு ஒத்துப்போகும் என்று, அடுத்த ஆண்டு மேலும் ரூ.35,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.
Tags:
இலங்கை