நாடாளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மே மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

அத்துடன், மே 7ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பாடசாலைகள் வழமைப்படி செயல்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.