இன்று இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி


இன்று (12) காலை சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் அதிக வேகத்தில் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதி, வீதியை விட்டு விலகி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலிருந்த மரம் மற்றும் வீடொன்றின் மதிலில் மோதி இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ் விபத்தின் போது பஸ்சில் இருந்த பல பயணிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்கு பஸ் சாரதியின் கனவக்குறைவே காரணமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.