புலமைப்பரிசில் பரிட்சை நடைபெறப்ப்போகும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்த இதனை அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பின் படி, குறித்த பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் ஏப்ரல் 4, 2025 முதல் ஏப்ரல் 30, 2025 வரை வரவேற்கப்படும். இதேவேளை, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுப் பாடசாலையிலோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலையிலோ தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை [https://onlineexams.gov.lk/eic](https://onlineexams.gov.lk/eic) என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.

மேலும், விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகள் அறிவுறுத்தல் தாளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*தொடர்பு எண்கள்*:  

- 011-2784537  

- 011-2786616  

- 011-2784208  

- 011-2786200  

- 011-2784201  

*மின்னஞ்சல் முகவரி*:  

[gr5schexam@gmail.com](mailto:gr5schexam@gmail.com)  

*அவசர எண்*: 1911  

*தொலைநகல் எண்*: 011-2784422