அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!


இலங்கையில் அஸ்வெசும திட்டத்தின் கீழ், தகுதி பெற்றவர்களுக்கு குறிப்பாக 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 70 வயதை அடைந்த முதிர்ந்தோருக்காக, புதுவருட வாழ்த்துக்களுடன் 3,000 ரூபாயாக வழங்கப்பட்ட கொடுப்பனவை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இக்குறித்த திட்டத்தின் கீழ், நலத்திட்டப் பலன்கள் வாரியத்தின் தகவலின்படி, தகுதியுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு ரூ.12.63 பில்லியனும், 70 வயதுக்கு மேற்பட்ட 580,944 பெரியவர்களுக்கு ரூ.2.9 பில்லியனும் செலுத்தப்படவுள்ளதாக அஸ்வெசும குழு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை (10.04.2025) முதல் தங்கள் வங்கிக் கணக்குகளின் மூலம் இந்த உதவித்தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.