நாட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் 21 பேர் காயம்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவலைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். 

நிட்டம்புவை-கிரிந்திவெல வீதியில் உள்ள மணமால வளைவின் அருகே, இராணுவத்தினரை ஏற்றி வந்த பேருந்து ஒன்று மற்றும் லொறியொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பேருந்து சாரதி மற்றும் அதில் பயணித்த 21 இராணுவத்தினர் காயமடைந்து வதுபிட்டிவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து வெளியேறிய நிலையில், பேருந்து சாரதியும் இன்னொரு நபரும் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.