இலங்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்
இலங்கையில் குடும்ப வைத்தியர் யோசனையை அறிமுகப்படுத்தும் தீர்மானம் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஆரம்ப சுகாதார சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளது மற்றும் மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே அதன் நோக்கமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.
இந்த யோசனையின் கீழ், கிராம அலுவலரின் 3 களங்களுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார்கள் மற்றும் அதற்கென தனி மையங்கள் உருவாக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக, இந்த திட்டம் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படுமென பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதி இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.