இன்று இடம்பெற்ற கோர விபத்து
இன்று (01) அதிகாலை தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
கலனிகம அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம நோக்கி 25.5 கிலோமீட்டர் தூணுக்கு அருகிலுள்ள பகுதியில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் இரண்டு லொறிகள், ஒரு சொகுசு வேன் மற்றும் ஒரு கார் அடங்குகின்றன. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று, வெளிநாட்டவர்களை ஏற்றிய சொகுசு வேனுடன் லொறியின் வலது பின்பக்கத்துடன் மோதியது. அதே சமயம், பின்னால் வந்த கார் வேனுக்கு மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாகவும், விபத்தில் பாதுகாப்பு வேலியும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.