இன்று யாழில் இடம்பெற்ற கோர விபத்து

 


யாழ்ப்பாணத்தில் இன்று காலை பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து ஏற்பட்டது. இதில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகனையும் மீட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தின் காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை, இதனை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.