கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து - பலர் காயம்
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், காயமடைந்தவர்களை விரைந்து வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இயக்கப்படும் இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளே சிக்கியுள்ளன. விபத்துக்குப் பின்னர், அந்த வீதியில் மேலும் பல வாகனங்கள் மோதி விபத்துகளில் சிக்கியுள்ளதாகவும், அதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.