நாட்டில் பால் தேநீரின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், பால் தேநீரின் விலையை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக,பால் தேநீர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7% வீதத்தால் அதிகரிக்கப்படுமெனவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.