நிலநடுக்கம் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் விவரங்களை தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்களது அறிக்கையில், 28 மார்ச் 2025 அன்று மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 334 அணுகுண்டுகளின் சக்திக்கு சமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அதன் சக்தி பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, மியன்மாரில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான நய்பிடாவில் 30 மார்ச் 2025 அன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் மிகப்பெரியதாக இருந்துள்ளது, ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தற்போது 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் மியன்மாரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் அத்துடன் அதன் பின்விளைவுகளும் மிகவும் ஆபத்தானவை என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.