யாழில் உணவகம் ஒன்றுக்கெதிராக ஒரு இலட்சத்து 56 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு மொத்தம் 1,56,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, சுகாதார விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கிய மூன்று உணவகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு உணவகத்தில் இருந்து காலாவதியான பொருட்களும் மீட்கப்பட்டன. அதன் பின்னர், குறித்த உணவகங்களுக்கு எதிராக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், மூன்று உணவக உரிமையாளர்களும் தங்களின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதாகவும், ஒரு உணவகத்தில் கண்டறியப்பட்ட சீர்கேடுகளை சீர்படுத்தும்வரை அதற்கு சீல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், மூன்று உணவகங்களுக்கு மொத்தமாக 90,000 ரூபாய், 36,000 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய் என, ஒரு இலட்சத்து 56,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.