தென்பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ஹொரணை-ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் லொரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் இருந்த லொரி சாரதியின் உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும், சிறிய லோரியும் இங்கிரிய நோக்கி சென்று கொண்டிருந்தபோதும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.